
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் விஜய் டிவியில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது 6-வது சீசன் முடிந்து, 7-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ் சீசன் 7 ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும், இந்த சீசனில் புதுப்புது திருப்பங்களாக அமைந்த சீசனாக இந்த சீசன் பார்க்கப்படுகிறது. இதில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் பிரதீப் ஆண்டனி.
இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல போட்டியாளர்கள் புகார் சொன்ன நிலையில், கமல் வாக்கெடுப்பு நடத்தி ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றி விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பிரபலங்கள் பிரதிப்புக்காக இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஒவ்வொரு போட்டியாளர்களும் பிரதிப்பிடம் வார வாரம் மன்னிப்பு கேட்டு வருகின்றன. இதனால் கடுப்பான பிரதீப் தற்போது ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் ‘வாரவாரம் வெளியே வர contestants-அ இப்படித்தான் மன்னிச்சுட்டு இருக்கேன். பேசாம பொம்பள பொறுக்கின்னு ஒத்துக்கிட்டு கூட நிம்மதியா இருக்கலாம் போல. எழுத விடுங்க ப்ளீஸ். நான் மனசுல வச்சுக்கல மன்னிச்சிட்டேன். என் பிரச்சனை என்னது. உங்க பிரச்சனை உங்களது. அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..
Vaara vaaram veliya vara contestants ah ipdi dhan mannichutu iruken???? Pesama pombala porukki nu othukitta kooda nimmathiya irukalam pola????
Ezhudha udunga please, Naan manasula vechukala, Mannichutten ????
En pretchanai endhu, unga pretchanai ungalthu ????#IdhukkuIlliyaSirOruEndUh pic.twitter.com/yHKK5P80Ef
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 29, 2023