இணையத்தில் தீயாய் பரவிய பிக் பாஸ் அபிராமியின் நிர்வாண வீடியோ… தக்க பதிலடி கொடுத்த அபிராமி.. வைரலாகும் புகைப்படம்..

இன்றைய காலகட்டத்தில்  தொழில்நுட்ப  இல்லாத வேலைகளே கிடையாது . அந்தளவிற்கு தொழில்நுட்பமாக அனைத்தும்  மாறி உள்ளனர். இந்நிலையிலும் எந்த அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு தீமையும் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம்  ஈசியாக போலிகளை உருவாக்கிட முடியும். ஆரம்பத்தில் இதை வைத்து சினிமா பாடல்கள் மோடி குரலில் ஒலிக்கவிட்டு வைரலானது.

   

அதன் பிறகு வயதான நடிகர்களை இளமை தோற்றத்தில்  காட்டி அசர வைத்தனர். சமீபத்தில் கூட ‘லால் சலாம்’ படத்திற்கு ஏ ஆர் ரகுமான் மறைந்த பாடல்களின் குரல்களை AI  உதவியுடன் மீட்டுக் கொண்டு வந்தார். இதை பயன்படுத்தி மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியின் முப்பது வயது வாலிப தோற்றத்தில் ஒரு படத்தில் காட்டப்பட்டுள்ளார். இப்படி சினிமாவில் பிரம்மிக்க வைக்கும்  விஷயங்களும்  நடந்துள்ளது.இந்த AI தொழில்நுட்பத்தை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், ஆலியா பட் என பாலிவுட் நடிகைகளை வைத்து தொடர்ந்து டீப் ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு அதனை வைரலாக்கினர்.இந்த வீடியோ பாலிவுட்டில் சலசலப்பை  ஏற்போடுத்தியது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான  நடிகை அபிராமியின் டீப் ஃபேக் நிர்வாண வீடியோ வெளியாகி கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு  நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒன்று நடக்ககூடாது. சமீபகாலமாக டீப் ஃபேக் மிகவும் பிரபலமாகி வருவது தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகவும்  இதன் மூலம் யார் வேண்டுமானாலும் நம்மை மோசமாக காட்டலாம் என்பது பயமுறுத்துகிறது.நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இதை உருவாக்கியவன் குற்றவாளி, ஆனால் அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி என்றும் கவலை வேண்டாம் அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்திம்  தக்க பாடத்தை கற்றுக் கொடுக்கும்.

நான் தைரியமான பெண். எனது வலிமையை யாராலும் தகர்க்க முடியாது. தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதை வைத்து எவ்வாரு உயர வேண்டும் என யோசிக்காமல் மற்ற எல்லாவிதமான கீழ்தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது.பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என தெரியவில்லை. நான் எதுவும்இதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதுபோன்று மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது நான் பேசுகிறேன் என அதில் கூறியுள்ளார்.