புதிய கார் வாங்கிய பிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்… குடும்பத்துடன் மகிழ்ந்த அழகிய தருணம்… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் கணேஷ் வெங்கட்ராமனும் ஒருவர். குறிப்பாக இவர் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு, தனி ஒருவன், அபியும் நானும் போன்ற படங்கள் இன்றுவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

   

சினிமா மட்டும் இல்லாமல் மாடலிங் துறையிலும் பிரபலமான இவர் பல்வேறு விதமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் கணேஷ். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இப்படி சினிமா, தொலைக்காட்சி என கலக்கிவரும் இவர் பிரபல சீரியல் நடிகை நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இக்குழந்தைக்கு சமைரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கணேஷ் .இவர் தற்பொழுது தான் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக இணையத்தில் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Ganesh VenkatRam (@talk2ganesh)