
பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் பிரதீப் ஆண்டனி. இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல போட்டியாளர்கள் புகார் சொன்ன நிலையில், கமல் வாக்கெடுப்பு நடத்தி ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றி விட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பிரபலங்கள் பிரதிப்புக்காக இணையத்தில் கருத்துகளை தெரிவித்தனர். ஆதரவு குவிந்து
இந்நிலையில் ஏற்கனவே பிரதீப் ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக கதை எழுதி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை இயக்க முன்னணி இயக்குனர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. எனவே பிரதீப் கைவசம் தற்போது வரை மூன்று படங்கள் உள்ளது என்றும் இந்த ஆண்டுக்குள் இந்த மூன்று படங்களும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.