
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ் சீசன் 7’. இதில் பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்துள்ளனர் அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் பூர்ணிமா ரவி போட்டியாளராக கலந்துள்ளார். இவர் நடந்த கலைஞர் ஆகவும் வி ஐ பி நடன கழகத்தின் உறுப்பினராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதை தொடர்ந்து இவர் டான்ஸ் இந்தியா டான்ஸ் மற்றும் ஜோடி நம்பர் ஒன் போன்ற பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
இவர் ஐடி தொழிலில் பணி செய்து கொண்டிருந்தார் அப்பணியானது அவருக்கு பிடிக்காமல் வேலையை விட்டுவிட்டார். நரி கூட்டம் சேனலின் மூலம் யூடியூபராக அறிமுகமானார். அங்கு அவர் நகைச்சுவை ஓவியங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்தார். அடிங்கு.. அராத்தி.. என்ற வசனம் மூலம் பிரபலமானார். யூடியுப் மூலம் கிடைத்த வரவேற்பு தான் பிக் பாஸ்க்கு செல்ல வாய்ப்பளித்தது. அதை தொடர்ந்து இவர் குறும்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
அதை தொடர்ந்து இவர் ‘ஹே சண்டக்காரி’ வெப் சீரியசிலும் நடித்துள்ளார். இவர் முன்னதாக கலந்து கொண்ட ஒரு பேட்டியில் படுக்கை அறை காட்சியில் நடிப்பீர்களா?.. என கேள்வி கேட்டதற்கு ரொமான்ஸ் அல்லது படுக்கை அறை காட்சிகள் எதுவா இருந்தாலும் நடிக்க சம்மதம் ஆனால் அது அந்த கதையுடன் ஒத்துப் போக வேண்டும் தானாக திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. இது போன்ற காட்சிகள் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று கூட சொல்லலாம் என்று கூறியிருந்தார்.