
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் மறைந்த நடிகர் விஜயகாந்த். இவர் சென்ற வருடம் உடல்நிலை குறைவால் காலமானார். இந்நிலையில் இவரது சமாதிக்கு தினந்தோறும் பலரும் வந்து செல்கின்றனர்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, அதன் பின்னரும் மதுரவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நேற்றைய தினம் தனது பிறந்த நாளில் மிகவும் சிம்பிள் ஆக கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் சண்முக பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘படைத்தலைவன்’ குழுவினர் இப்படத்தில் டீசரை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.
இந்த வீடியோவில் படைத்தலைவன் காட்சியை பார்க்கும்போது இப்படம் மிகவும் அருமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதைப்போல் அவரது அண்ணன் விஜய பிரபாகரன் தன் தம்பி பிறந்த நாளைக்கு பரிசாக காஸ்ட்லியான Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
View this post on Instagram