
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது திரை பயணத்தை தொடங்கினார்.2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவளும் நானும்’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தி கிரேட் இன் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, தீர காதல் போன்ற பல படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்களின் இறப்புக்கு நேரில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செல்லவில்லை என்று தெரிகிறது. எனவே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு கடை திறப்பு விழாவின் போது அவர் பேசிய வீடியோவானது, தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பாண்டிச்சேரியில் இருந்து கேப்டன் இறப்பிற்கு வர முடியவில்லை. பாண்டிச்சேரி என வெளிநாட்டிலா உள்ளது என கலாய்த்து வருகின்றனர். வீடியோ இதோ,