
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டனர்.
இதில் கொல்கத்தாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓட விட்டது .பொதுவாக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான போட்டி நடைபெற்றாலே சினிமா பிரபலங்கள் படையெடுத்து வரத் தொடங்கி விடுகிறார்கள்.
மஞ்சள் நிற ஜெஸ்ஸியை அணிந்து கொண்டு நடிகைகள் வருவதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து தான் வருகிறோம்.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியை காண்பதற்கு சுருதிஹாசன், ஷாலினி, யாஷிகா ஆனந்த், ரவீனா, வரலட்சுமி சரத்குமார் என பலரை பார்த்து வந்திருக்கிறோம்.
அதுமட்டுமில்லாமல் நடிகர்களான தனுஷ், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சூர்யா என பல நடிகர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதை பார்த்து வருகிறார்கள்.
நேற்று பிரேமம் படத்தின் கதாநாயகியான மமீதா பைஜூ மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து சென்னை அணிக்கு ஆதரவாக விசில் அடித்துக் கொண்டாடியிருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த புகைப்படங்கள் இதோ..