
இந்திய கிரிக்கெட் அணிக்காக 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை விளையாடியவர் அம்பதி ராயுடு. இவர் 55 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 சதம் மற்றும் 10 அரை சதத்துடன் 1,694 ரன்களை குவித்தவர் தான் அம்பத்தி ராயுடு.
இவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த அம்பத்தி ராயுடு, 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பிளேயராக வலம் வந்து, தனது பேட்டிங் மூலம், சுழற்பந்து, வேகப்பந்து என அனைத்தையும் அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடுவார்.
கடந்த மே மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வினை அறிவித்த அம்பத்தி ராயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.