
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தான் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்கத்தில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கோட். இப்படத்தில் விஜய்,பிரசாந்த், மோகன் , பிரபுதேவா, சினேகா, லைலா,மீனாட்சி சௌத்ரி போன்ற பல பிரபலங்களின் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் அப்டேட் ஆனது அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் அப்டேட் வெளியாவதன் காரணமாக இப்படத்தின் எதிர்பார்ப்பானது அதிகரித்து வருகிறது .இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது அப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
அதில் மதன் கார்த்தி வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடல் நாளை 6:00 மணிக்கு வெளியாக உள்ளதாக பட குழு ஒரு ப்ரோமோ வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.