பேரன் பேத்திகளுடன் நகைச்சுவை நடிகர் செந்தில்…. குடும்பத்துடன் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் 80’ஸ், 90’ஸ் காலகட்டத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில்.

   

சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர் என்று கூறினாலே கவுண்டமணி செந்தில் தான் பலரும் கூறுவார்கள். இவர்களுடைய காமெடிக்கு இன்றளவும் வரவேற்பு இருக்கின்றது.

முதலில் நடிகர் செந்தில் மதுபான கடையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் நாடகங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு முதன்முதலாக மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர்.

இவர் தனது அப்பா செந்தில் பெயரில் ஒரு மருத்துவமனையை தொடங்கி நடத்தி வருகிறார். இரண்டாவது மகன் மணிகண்ட பிரபு உன்னை எனக்கு பிடித்திருக்கு என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.

ஆனால் படம் பூஜை போட்டு தொடங்கப்பட்ட நிலையில் அப்படியே நின்று போனது. இவரது மூத்த மகனான மணிகண்ட பிரபுவுக்கு டாக்டர் ஜனனி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு கவுண்டமணி கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார். தற்போது செந்தில் அவர்களுக்கு பேரன் பேத்திகள் என்று இருக்கிறார்கள். குடும்பத்துடன் நடிகர் செந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ..