விஜய் டிவியுடன் போட்டி போட்டு.. சன் டிவி செய்ய உள்ள மாற்றம் என்ன தெரியுமா?

ஒவ்வொரு டிவி சேனல்களும் வித்தியாசமான ரியாலிட்டி  ஷோக்களும், சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகின்றனர். இந்நிலையில் வார  இறுதியில் டிஆர்பி ரேட்டிங் விஜய் டிவிக்கும் சன் டிவிக்கும் இடையே கடும் மோதல் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

   

ஒரு வாரத்தின் முடிவில் எந்த  டிவி  சீரியல்கள் டாப்5 இடத்தை பிடித்துள்ளனர் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். தற்போது விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘ஆகா கல்யாணம்’.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆகா கல்யாணம் சீரியலுக்கு போட்டியாக ‘கலாட்டா கல்யாணம்’ என்னும் புதிய சீரியலை சன் டிவி  ஓளிபரப்பாக  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.