
சன் டிவி யில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’.
இந்த சீரியலை திரு செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே அதிகமான ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது.
இந்த சீரியல் முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி ஆணாதிக்கம் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு பெண் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறாள் என்பதை பற்றியும்,அதிலிருந்து அவள் எப்படி வெளி வருகிறாள் போன்ற விஷயங்களைப் இந்த சீரியல் காட்டப்படுகிறது.
இந்த சீரியலானது இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக மூத்த மருமகளாக நடிப்பவர் தான் நடிகை கனிகா.
இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். இவரின் உண்மையான பெயர் திவ்யா வெங்கடசுப்பிரமணியன் .திரை உலகிற்காக தன் பெயரை கனிகா என்று மாற்றிக் கொண்டார்.
இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘5 ஸ்டார்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் ஆட்டோகிராப், டான்சர், வரலாறு ,போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகை மட்டுமல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ,பின்னணி பாடகர், மாடலிங் போன்ற பல பன்முகத்திறமையை கொண்டவர்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்,
அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் குட்டையான ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட்டில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியியாகி வைரலாகி வருகிறது.