‘லியோ’ பட பாணியில் தல தோனியை களம் இறக்கிய CSK Team.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

பெரியவர்கள் இருந்து சிறியவர் வரை கிரிக்கெட் விளையாட்டு ஆனது அனைவருக்கும் பிடித்த ஒன்றாக மாறி இருக்கிறது.  தற்போது ரசிகர்கள் கோலாகலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் போட்டி இந்த மாதம் மார்ச் 22ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் பத்து அணிகள் மோதிக்கொள்ளும் உலகளாவிய கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல இன்ப அதிர்ச்சி வழங்கும் போட்டியாக இந்த ஐ.பி.எல் தொடருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

   

முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே   சென்னையில் உள்ள சேப்பாக்கம் மா சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து கோலாகலமாக  தொடங்க உள்ளது . இரவு ஏழு முப்பது மணிக்கு டாஸ் போட்டு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனினும் இந்த தொடரின் இந்த வருட முதல் ஆட்டம் என்பதால் முன்னதாகவே இசைக்கச்சேரி போன்றவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இந்த ஆட்டம் மறக்க முடியாத ஆட்டமாக  ரசிகர்களுக்கு இருக்கும்.

ஏனென்றால் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எம் எஸ் தோனி தலைமையில் சென்னை அணியும் ,சென்னை மண்ணில் வெற்றி பெற்று பெங்களூர் கொடியை நாட்ட முனைப்புடன் இருக்கும் வீராட் கோலி தலைமையில் பெங்களூர் அணியும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி முதல் 21 போட்டிகள் மட்டுமே பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  2024 மக்கள் பொது தேர்தல் இருப்பதால் சில அணிகளுக்கு  இடையிலான விளையாட்டு தேதிகளில் மாற்றம் இருக்கும்.

சென்னை மற்றும் பெங்களூர் அணியில் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி பெற முன்னதாகவே தமிழகம் வந்தடைந்ததும் வழக்கம் என்பதால் அவர்களின் வருகை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரான தல தோனி தான் மீண்டும் பழைய பாணியில் வந்துள்ளது உறுதி செய்யும் வகையில் தனது அட்டகாசமான தோற்றத்துடன் சென்னை வந்துள்ளார் .அவர் வருகை கொண்டாடும் விதமாக  சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தினர் தங்களின் X தள  பக்கத்தில் ‘லியோ’ படத்தின் காட்சியை மறு தயாரிப்பு செய்து வெளியிட்டு இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.