
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
அதன் பின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார் அதன் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.
பொதுவாகவே சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்.ஆனால் ரச்சிதாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் நடித்தார்.நடிகை ரச்சிதா தினேஷ் உடன் சுமார் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அதன் பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அவரது கணவர் தினேஷ் பிக் பாஸ் 7ல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.தற்போது ரச்சிதா மெய் நிகரே,நெருப்பு,
எக்ஸ்ட்ரீம் என்ற மூன்று தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவரின் சின்னத்துரை to வெள்ளித்திரை புகைப்படங்களின் தொகுப்பு.