
நடிகை சம்யுக்தா மேனன், மலையாள நடிகையான இவர் பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார் நடிகை சம்யுக்தா.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வாத்தி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சம்யுக்தா மேனன். இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான நடிகையாக மாறிவிட்டார் நடிகை சம்யுக்தா மேனன்.
இந்நிலையில் தற்போது அவரது நண்பரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார் என்றும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இந்த ஆண்டு இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து நடிகை தரப்பில் எந்த வித தகவலும் வெளிவரவில்லை என தெரிகிறது.