
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதனையடுத்து D50, இப்போது ராயன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இப்படி பான் இந்தியா ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ‘என பெயரிடப்பட்ட படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் ஹீரோவாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். மேலும் படத்தின் ஹீரோனியா குட்டி நயன்தாரா என அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் நடித்து வருகிறார் இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரீ கொடுத்தார்.
தற்போது பல மொழி படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக வலம் வருகிறார் எனவே நேேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டர் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.