
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின், தற்போது அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் “லால் சலாம்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கிரிக்கெட்டை மையாமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 9 தேதி வெளியாக உள்ளதாக வலைப்பேச்சு சக்திவேல் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகள் வெளியான நிலையில், ரீ சூட் எடுத்துள்ளதாகவும், அதற்கான நஷ்ட ஈடு தொகையை ரஜினி எனது சம்பளத்தில் பிடித்து கொள்ளுங்கள் என மகள் செய்த தவறுக்கு அவர் பணம் கொடுக்க உள்ளதாக வலைப்பேச்சாளர் சக்திவேல் கூறியுள்ளார்.