இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எத்தனை கோடி சொத்து உள்ளது தெரியுமா?..

தமிழ் சினிமாவின் மிகவும்  பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மகள் ஐஸ்வர்யா வளர்த்து வரும் இயக்குனராக இருக்கிறார்.  இவர்  தன் கணவர் தனுசை வைத்து  3 என்ற  படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில்  அறிமுகமானார்.

அதை தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார்.அதன் பிறகு  சினிமாவுக்கு பிரேக் விட்டு  ஐஸ்வர்யா பிட்னஸ் மற்றும் மகன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார் . தற்போது இவர் ‘லால் சலாம்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம்  பொங்கல் அன்று வெளியாக  உள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

   

தற்போது ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு பற்றி இணையத்தில் வைரலாகி வருகிறது.இவர் சினிமா மட்டுமின்றி பிரபல நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராகவும் இருந்து வருகிறாராம்.  அது மட்டுமல்லாமல் தங்கம் வைரம் என்று வாங்கி வைத்துள்ளாராம். அதை தொடர் இவர் ஒருபடத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.இவருக்கு  ரூ.40 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.