
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சுசீந்திரன். 18 வயதில் சென்னைக்கு உதவி இயக்குனராக வந்து 12 வருட போராட்டத்திற்கு பிறகு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர்.
இயக்குனர் சுசீந்திரன் கிராமப்புறங்களில் இருக்கும் ஜாதிய அரசியலை தோலுரிக்கும் படமாக வெண்ணிலா கபடி குழு அமைந்தது.
அதைத் தொடர்ந்து இரண்டாவதாக நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார்.
பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ஜீவா, மாவீரன் கிட்டு உள்ளிட திரைப்படங்களை இயக்கி இருந்தார். பின்னர் பாண்டியநாடு, பாயும் புலி என விஷாலுடன் இணைந்து ஆக்சன் திரில்லர் படங்களை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வந்த இவர் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் ஜி பி முத்துவுடன் சேர்ந்து திருச்செந்தூருக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றார். ஜி பி முத்துவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
இவரது வட்டார வழக்கு மொழியால் பலரையும் கவர்ந்தவர். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தொடர்ந்து youtube சேனலில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.
இவரும் இயக்குனர் சுசீந்திரனும் சேர்ந்து திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.