
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. இவர் செய்தி வாசிப்பாளராக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். அவரது தமிழ் உச்சரிப்பு எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் பல அரசு நிகழ்ச்சிகளில் கூட தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்து.
அதன் பிறகு you tube ல் சினிமா விமசகராக இருந்தார். அதன்பின் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் திவ்யா துரைசாமி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.இதை தொடர்ந்து குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன்,சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பட வாய்ப்பு குறைந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வெப் சீரியலிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகை திவ்யா துரைசாமி நடிப்பில் ‘வாழை’ என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் ஸ்லீவ்லெஸ் சேலையில் வெளியிட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram