
2002 ஆம் ஆண்டு இயக்குனர் அசோகன் இயக்கத்தில் வெளியான படம் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’. இப்படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராதா.
முதல் படமே சூப்பர் ஹிட் படமாக இவருக்கு அமைந்தது. இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது.
இவர் நடிகர் சரத்குமார் மற்றும் சத்யராஜ் உடன் இணைந்து நடித்தார். தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் பேர் சொல்லும் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அவர் சீரியல்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு திருமண வாழ்க்கையில் ஐக்கியமான ராதா சொல்லும் அளவிற்கு இவரது திருமண உறவு அமையவில்லை வெறும் சண்டை, சச்சரவுகள் இருவரின் திருமண வாழ்க்கை மோசமாக இருந்தது.
இந்நிலையில் அதிலிருந்து வெளியே வர ராதா மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பான ‘பாரதிகண்ணம்மா2’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.