
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவி ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.அதை தொடர்ந்து ‘மன்மதன்’ திரைப்படத்தில் துணை வேடத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் அவருக்கு வாய்ப்பளித்தார்.
அதன் பிறகு நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். சில வருடங்களிலேயே காமெடி நடிகராக பீக்கிள் இருந்தார். பல நடிகர்கள் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். ‘நான் ஈ’ படத்திற்காக ராஜமௌலி சந்தானத்தின் கால்ஷீட்டை எதிர்பார்த்து காத்து இருந்தார். அதன் பின் அறை எண் 305-ல் கடவுள் படத்தில் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்தார்.
அதை தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமேல் இப்படித்தான் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த்துள்ளார். இவர் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்துக்கு 14 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். இவரின் ஒட்டுமொத்தமாக 70 முதல் 80 கோடி ரூபாய் சொத்துக்கு உள்ளனர். வரும் மாதம் பிப்ரவரி 2 இவரின் ‘வடக்குப்பட்டி’ ராமசாமி படம் வெளியாக உள்ளது.இன்று சந்தானம் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் இன்று மாலை வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.