‘ராஜா ராணி சீசன் 2’ சீரியல் நடிகர் நடிகைகளின் நிஜ பெயர்கள் தெரியுமா??

சின்னத்திரை சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

   

அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி சீசன் 2’.

இந்த சீரியலானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்த சீரியல்  முடிவுக்கு வந்தது.

இந்த சீரியல் முதலில் ஆலியா மானசா மற்றும் சித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.

அதன் பிறகு ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா என்பவர் சந்தியா  கதாபாத்திரத்தில்  நடித்தார்.

சில காரணங்களால் காரணங்களால் அவரும் இந்த சீரியல் இருந்து வெளியேறி அவருக்கு பதிலாக ஆஷா என்பவர் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இதில் நடித்த விஜே அர்ச்சனா சில காரணங்களுக்காக  இந்த சீரியலில் இருந்து விலகினார் அவருக்கு பதிலாக அர்ச்சனா குமார் என்பவர் இதில் நடிக்க தொடங்கினார்.

இந்த சீரியலானது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டிய  கடந்த 21ஆம் தேதி முடிவுக்கு வந்தது.. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை எண்ணி  ரசிகர்கள் சற்று வருத்தமாக இருந்தாலும்அவர்கள்  அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் இதன் கிளைமாக்ஸ் அமைந்துள்ளது .

தற்போது இந்த சீரியலில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான பெயர்களை அறிவோம் .

இதில் மூத்த அண்ணன் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகர்  சித்து.

இவருக்கு ஜோடியாக மூத்த அண்ணியாக  சந்தியா ஐ.பி.எஸ் கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை  ஆஷா கௌடா.

இந்த சீரியலில்  சரவணனின்  மூத்த தம்பியாக செந்தில் கதாபாத்திரத்தில் நடித்தவர்  பாலாஜி தியாகராஜன்.

இந்த சீரியலில்  சரவணனின் இரண்டாவது தம்பியாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே பிரதோஷ்.

இந்த சீரியலில்சரவணனின் தங்கையாக  பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வைஷ்ணவி.

இந்த சீரியலில்  செந்திலுக்கு மனைவியாக  அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அர்ச்சனா குமார்.

இந்த சீரியலில் சரவணன் அம்மாவாக சிவகாமி சகதாபாத்திரத்தில்  நடித்தவர்   நடிகை    பிரவீனா.

சரவணன் அப்பாவாக சுந்தரம் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சைவம் ரவி.

இந்த சீரியலில் வீட்டு பணி புரியும் பெண்ணாக மயில் கதாபாத்திரத்தில் சுஜி என்பவர்  நடித்துள்ளார்.