
இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான படம் ‘குணா’. இப்படமானது ரசிகர் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. ஒரு சிலர் மட்டும் அந்த படத்தை கொண்டாடினார்கள். ஆனால் 33 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் வெளியான ’மஞ்சும்மள் பாய்ஸ்’ என்ற படம் சமீபத்தில் வெளியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற அதன் காரணமாக தற்போது மீண்டும் குணா படம் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.
தற்போது 33 ஆண்டுகள் கழித்து குணா படத்தில் சில சுவாரசியமான சம்பவங்ள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. குணா’ படத்தில் நாயகி ஆக நடித்த ரோஷினி அதன் பின்னர் ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில் அவர் என்ன ஆனார்? எங்கே இருக்கிறார்? என்பது கூட திரையுலகினருக்கு தெரியவில்லை. இதை பற்றி சமீபத்தில் குணா படத்தின் இயக்குனரான சந்தானபாரதி கூறிய போது ,
ரோஷினி நடிக்கும் போதே இந்த ஒரு படத்துடன் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். அவர் தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லை. அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணமும் இல்லை, அவரது குடும்பத்தினர்கள் அவர் நடிக்கையாக தொடர்வதை விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். தற்பொழுது 33 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இயக்குனர் சந்தாபாரதி மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.