
தனியார் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து மிகவும் பிரபலமானவர் தான் அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4யில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் 84 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டினுள் இருந்தார். பிக் பாஸ் வீட்டில் இவர் பலருடன் அதிகமாக சண்டை போட்டதன் காரணமாக அதிகமாகட்ரோல் செய்யப்பட்டார்.
பிக் பாஸிற்கு பிறகு அனிதா சம்பத் படங்களில் நடிப்பதை மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.அவர் சொந்தமாக youtube சேனல் ஒன்று நடந்து வருகிறார்.இந்நிலையில் அனிதா சம்பத் தன் கணவருடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அந்த வீடியோ youtube சேனலில் வெளிட்டுள்ளரார்.இந்நிலையில் மாலத்தீவு அரசு தற்போது இந்தியாவுடன் மோதலில் இருந்து வருவதால் அங்கிருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற உதவிட்டு வருகிறது. அதனால், மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா வருவதை வந்து செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இப்படியான நேரத்தில் அனிதா சம்பத் அங்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. உங்களுக்கு இந்தியாவில் வேறு இடமே இல்லையா? மாலத்தீவுக்கு தான் செல்ல வேண்டுமா என்றெல்லாம் பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக அனிதா சம்பத்திற்கு எதிரான கருத்துகள் குவிந்து வருகிறது.