
தமிழ் சினிமாவில் மதராசப்பட்டணம் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகை எமி ஜெக்சன். இதுவே இவரின் முதல் திரைப்படம். மாடலிங் மூலமாக தனது பயணத்தை தொடங்கினர் . அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் இவர் விக்ரம் உடன் “ஐ” தனுஷ் உடன் தங்க மகன் அட்லி இயக்கத்தில் விஜய் உடன் “தெறி” உதயநிதி உடன் “கெத்து” ரஜினியின் எந்திரன், 2.0 என்று தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து சற்றே இடைவெளி விட்டு சமீபத்தில் பொங்கல் வெளியீடாக மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் மிஷன் சாப்டர் 1 என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
2019 ல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பணோயிட் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் முதல் கணவர் ஜார்ஜ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.
பின்னர் ஹாலிவுட் நடிகர் எட் கெஸ்விக் அவர்கள் உடன் காதல் ஏற்பட்டு, சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பனி படர்ந்த மலையில் ஒரு பாலத்தின் மீது நின்று காதலை உலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்து மோதிரம் மாற்றி உறுதி செய்யும் வகையில் மிகவும் கியூட்டான புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு வைரல் ஆக்கினர்.
இந்நிலையில் எமிஜாக்சன் தம் பிறந்த நாளை மகன் மற்றும் காதலர் உடன் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.