
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனாவும் ,இரண்டாவது இடத்தை மணியும் , மூன்றாவது இடத்தை மாயாவும் பிடித்தனர்.
பிக் பாஸ் வீட்டினுள் இரண்டு டீமாக இருந்தது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான் A டீமில் நிக்சன் ,மாயா, பூர்ணிமா, விஜய் வருமா, சரவணா விக்ரம், அக்ஷயா,ஜோவிகா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
B டீமில் அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு ,கூல் சுரேஷ், பிராவோ ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். தற்போது நிகழ்ச்சியில் முடிந்தும் கூட இந்த இரண்டு டீமிகளும் ஒன்று சேராமல் தனித்தனியாகவே சுற்றி வருகின்றனர்.
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதாவும் தன் மகள் இருக்கும் A டீமில் ஒரு அங்கமாகிவிட்டார்.
இந்நிலையில் வனிதாவின் உறவினர் திருமணத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்களை அழைத்துச் சென்று அங்கு சாப்பிடும் போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் வனிதா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன் , விஜய் வருமா போன்றோர் கலந்து கொண்டனர்.இதை பார்த்த ரசிகர்கள் போட்டியாலர்களுக்குள் பிரிவினையை உண்டாகி வருகிறாரா வனிதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.