
தமிழ் சினிமாவில் ராமராஜன் நடித்த ’எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா.
இவர் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் இவர் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். மேலும் ‘செண்பகமே செண்பகமே..’ என்ற பாடலின் மூலம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் சாந்தி பிரியா.
இந்நிலையில் சாந்திக்கு தற்போது 53 வயது ஆகி வரும் நிலையில், கடந்த 1999 ஆம் ஆண்டு சித்தார்த் ரே என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சித்தாத் ரே கடந்த 2004ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ் திரையுலகின் பிரபல நடிகை பானுப்பிரியாவின் சகோதரி என்பது பலர் அறிந்ததே.
நடிகை சாந்தி ப்ரியா ஒரு காலகட்டத்தில் சினிமாவில் இருந்து நடிப்பதே நினைத்து விட்டு குடும்பத்தை கவனித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது சினிமாவில் நீ என்று கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர், இந்தியாவின் நைட்டிங்கேல் டாக்டர் சரோஜினி நாயுடு வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் சரோஜினி நாயுடு ரோலில் நடித்து வருகிறார்.
சாந்தி பிரியா, தற்போது தமிழில் வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா பரத் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.