பால் அபிஷேகம் முதல் பீர் அபிஷேகம் வரை… கேப்டன் மில்லர் திரைப்படத்தை கோலாகலமாக வரவேற்ற ரசிகர்கள்..

எல்லா வருடங்களும் பொங்கலன்று பிரபல நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று . சென்ற வருடம் விஜய் மற்றும் அஜித் படம் வெளியானது. இந்த வருடத்தின் பொங்கலை முன்னிட்டு தனுஷ் , சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் படங்கள் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

   

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் புதுச்சேரியில்  காமராஜர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியானது. புதுவையில்  நடிகர் தனுஷ் தலைமை ரசிகர் மன்றம் சார்பாக திரையரங்குகளில் பிரம்மாண்டமான கட்டவுட் வைக்கப்பட்டு அதற்கு ரசிகர்கள் பால் , பீர் அபிஷேகம் செய்து பூ தூவி , 108 தேங்காவையும் உடைத்துக் கொண்டிருந்தனர்.

மேலும் பொங்கல்  பண்டிகை ஒட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் பொது மக்களுக்கு கரும்பு வழங்கி வாழ்த்து கூறினார். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் பெண் ரசிகர்கள் சாலையில் இறங்கி நடனம் ஆடியது அப்பகுதியில் இருந்த ரசிகர் மற்றும் பொதுமக்களை பிரம்மிப்பை ஏற்படுத்தியது.