தனது காதலியை காதலர் தினத்தன்று… அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்த நடிகர் காளிதாஸ் ஜெயராம்… எவ்ளோ அழகா இருக்காங்க… இதோ பாருங்க…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயராம். தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர் தான் இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். மலையாள நடிகரான காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பு மண்பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து புத்தம் புது காலை மற்றும் பாவ கதைகள் போன்ற அந்தோலஜி படங்களில் நடித்துள்ளார். பாவ கதைகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்ட பெற்றது.

இதை தொடர்ந்தவர் ‘பேப்பர் போட்’ என்ற வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில், கமலஹாசனுக்கு மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மாடல் அழகியான தாரணி காளிங்கராயனை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு இருந்தே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் அவ்வப்பொழுது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.

இதன் மூலம் இவர்களது உறவு வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில் காதலர் தினமான இன்று ‘நான் தனிமையில் இல்லை’ என காளிதாஸ் தனது காதலியுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை பகிர்ந்து தனது காதலை உறுதி செய்துள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வருகிறது ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram)