‘வாணியம்மா தனது புடவைகளை எனக்கு தருவார்… அதை நான் உடுத்திக் கொள்வேன்’… இதை கூறிய பிரபல செய்தி வாசிப்பாளர் யார் தெரியுமா?… நீங்களே பாருங்க…

‘கலைவாணி’ எனும் இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தவர். இந்திய அளவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். 19 மொழிகளில், சுமார் 1000 படங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடிய பாடல்களை பாடியுள்ளார் பாடகி வாணி ஜெயராம்.

   

இவர் 1971இல் ‘குட்டி’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தமிழகம் , ஆந்திரா , ஒடிசா  முதலிய மாநில அரசுகளின் விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை  பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 77 வயதைக் கடந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் தனது வீட்டில் மயங்கிய நிலையில் உயிரிழந்தார். பாடகி வாணியம்மாவிற்கு குழந்தைகள் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் தற்பொழுது அவரது மகள் என பிரபல செய்தி வாசிப்பாளர் ரத்னா கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. 90களில்  பிரபல செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர் ரத்னா.

இவரும் வாணியம்மாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்பொழுது  இணையத்தில் வெளியாகி உள்ளது. பாடகி வாணியம்மா குறித்து செய்தி வாசிப்பாளர் ரத்னா கூறும் பொழுது,

‘எந்த குழந்தைகளாக இருந்தாலும் தனது குழந்தையாகவே பார்த்துக் கொள்வார். என்னையும் கூடவே சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார். பத்மபூஷன் விருது அளித்த போது கூட வாழ்த்து கூறியுள்ளேன். மேலும் அவர் தனது புடவைகளை எனக்கு தருவார். அதை உடுத்திக்கொண்டு செய்தி வாசித்துள்ளேன்’என்று தற்பொழுது கூறியுள்ளார்.