பிக் பாஸ் பிரபலம் மஹத்தின் மகனை பார்த்திருக்கீங்களா?… இவ்வளவு பெருசா வளந்துட்டாரே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

பிக் பாஸ் பிரபலமான மகத் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் வளரும் நடிகராக இருப்பவர் மஹத் ராகவேந்திரா. இவர் நடிகர் சிலம்பரசனின் நெருங்கிய நண்பர். சிம்புவுடன் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர மங்காத்தா, பிரியாணி, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் விஜயுடன் இணைந்து நடித்த ‘ஜில்லா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தற்பொழுது இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தற்பொழுது இவர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ‘2030’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து அவர் ஹிந்தியில்  ‘சத்ராம் ரமணி’ இயக்கி வரும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் மூலம் முதன்முதலாக ஹிந்தியில் களமிறங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மஹத் பிராசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் மகத். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’ நடிகர் மஹத்தின் மகனா இவர்? இவ்வளவு பெருசா வளர்ந்திட்டாரே’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.