சிறுவயதில் அக்காவுடன் சேட்டை செய்து விளையாடிய குட்டி கீர்த்தி சுரேஷை பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் அவரின் கியூட் புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதைத்தொடர்ந்து ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதே போல ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘சைரன்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இதோடு மட்டுமின்றி தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதே நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. நடிகை கீர்த்திக்கு ரேவதி எனும் ஒரு அக்கா உள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அக்காவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களை இணையத்தில் பகிந்துள்ளார்.