90ஸ் களில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் பல குணசித்ரா வேடங்களில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகர் மன்சூர் அலிகான்.இவர் திண்டுக்கல்லில் உள்ள ஜவ்வாது பட்டி புதூரை பூர்வீகமாகக் கொண்டவர்.

   

மும்பையில் அனுபம் கெரின் நடிப்பு மும்பை பள்ளியில் தனது பயிற்சியை பெற்ற மன்சூர் அலிகான்.இவர் 1991 ஆம் ஆண்டு கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இப்படமானது இவரின்  திரைப்பட வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.அதை தொடர்ந்து  சிங்கம்2,  ஜாக்பாட்,  சிலுக்குவார் பட்டி சிங்கம்,  சரவணன் இருக்க பயமேன்,

நானும் ரவுடிதான்,  புலன்விசாரணை 2 , மிரட்டல்,  கந்தசாமி போன்ற பல தமிழ் திரைப்படங்களில்  நடித்துள்ளார். 90களில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகராக நடித்துள்ளார்.

இவர் பெரும்பாலும் மறைந்த நடிகர் கேப்டனுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.  2019 ஆம் ஆண்டு வெளியான ஜாக்பாட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மேதை’ என்ற திரைப்படத்தின் மூலமாக 2022 ஆண்டு சினிமாவில்  என்ட்ரி  கொடுத்தார்.

அதை தொடர்ந்து தற்போது சமீபத்தில் இவர் நடிப்பில்’ ஜோசுவா இமைப்போல் காக்க’ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் பகாசுரன், பிச்சைக்காரன் 2, சிம்மம் போன்ற படங்கள் வெளியாகி உள்ளது.இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம்,  தெலுங்கு,  மலையாளம், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி அலி கான் துக்ளக் என்ற மகனும் ,ஜுலைஹா என்ற மகளும்  உள்ளனர்.  இவரது மகன் அலி கான் துல்கத் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .