
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். இவர் இதுவரை பல படங்களை இயக்கி நடித்துள்ளார். இவருடைய இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று ‘முந்தானை முடிச்சு’.
1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், தீபா, நளினிகாந்த், கோவை சரளா என பலர் இணைந்து நடித்திருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வர வைத்த திரைப்படம் என்ற பெருமை முந்தானை முடிச்சு படத்திற்கு உண்டு.
மேலும் அப்போதே 100 நாள் ஓடிய திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்ற திரைப்படம் இது. இந்த படத்தில் பாக்யராஜின் மகனாக சிறு குழந்தை ஒன்று நடித்திருக்கும். இந்த படத்தில் 41 நாட்கள் குழந்தையாக நடித்து அறிமுகமானார் சுஜிதா.
இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணி தனம் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சுஜிதா தான்.
இவர் சூப்பர் ஸ்டார் உடன் மனிதம், சத்யராஜ் நடித்த ‘பூவிழி வாசலிலே’ வாலி ,இருவர், தியா, பள்ளிக்கூடம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.