
டிக் டாக் மூலம் பிரபலமாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஜி பி முத்து. இவரின் உண்மையான பெயர் கணேசன் பேச்சி முத்து.இவர் 1985 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பிறந்தார் இவர் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டவர். இவர் தந்தை கணேசன்.இவர் படிப்பை பாதியிலேயே விட்டு தந்தையுடன் சேர்ந்து நகைக்கடையில் வேலை செய்ய தொடங்கினார். சிறிது காலம் பணியாற்றினார் ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களின் வணிக வியாபாரம் தோல்வியடைந்தது.
இவர் டிக் டாக்கில் நெல்லை தமிழில் பேசி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதன்பிறகு டிக் டாக் செயலி தடை செய்த பிறகு youtube சேனல் ஒன்று தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் சேனலுக்கு சுமார் ஒன்பது லட்சத்தில் இருக்கும் அதிகமான சப்ஸ்கிரைப் உள்ளனர். இதைத்தொடர்ந்து இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டார். பிறகு வீட்டின் நினைவின் காரணமாக சில நாட்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.நடிகை சன்னி லியோன் நடிக்கும் ‘ஓ மை பெஸ்ட் ‘என்ற படத்தில் நடித்துள்ளார் ஜி பி முத்து.
ஒரு நல்ல நடிகராகவும், சிறந்த மனிதராகவும் விளங்கிய நடிகர் விஜயகாந்த் அரசியலிலும் சிறப்பான ஆளுமை பெற்றிருந்தார். எனவே, அவரின் மரணம், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். மேலும் நேரில் வர முடியாத நடிகர்கள் சிலர், தற்போது அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐயா கேப்டன் அவர்களுடைய வீட்டிற்கு தற்பொழுது என்னால் செல்ல முடியவில்லை என்றும் அவர் செய்த நல்ல பல பணிகளை நாம் அனைவரும் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
நானும் என்னால் முடிந்த உதவிகளை தற்போது செய்து வருகிறேன். மேலும் நிச்சயம் அவரைப்போல மக்களுக்கு நன்மைகளை செய்ய எனக்கும் ஆசையாக இருக்கிறது. இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிபி முத்து பேசியுள்ளார்.