நான் அட்ஜஸ்ட் பண்ணனும்னு நெனச்சேன்.. ஆனா அவர் அப்படி இல்ல… ஓபன் டாக் செய்த நடிகை இனியா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை  இனியா.  இவர் பாடகசாலை என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் விமலுடன் சேர்ந்து ‘வாகை சூடவா’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார்.அதன் பிறகு தமிழில் யுத்தம் செய்,  மாசிலாமணி,  சென்னையில் ஒரு நாள்,  நான் கடவுள் இல்லை என பல படங்களில் நடித்துள்ளார்.

   

இயக்குநர் துரைமுருகன் இயக்கி ‘சீரன்’ திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, நரேன், சென்ராயன் உள்ளிட்ட பிரபலகள்  நடித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நடிகை  இனியா பேசியுள்ளார். அதில் இனியா படத்தில் நடந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் ஜேம்ஸ் கார்த்திக் சினிமாவுக்கு புதிது என்பதால் அவருடனான நடிக்க வேண்டிய பல காட்சிகளில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என நினைத்தேன்.ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு சீனிலும் தனது முழு  நடிப்பை வெளிப்படுத்தி என்னையே ஆச்சரியப்பட வைத்து விட்டார். அவர் தான் அதிக டேக் எடுப்பார் என்று நினைத்தேன் ஆனால் நான் தான் அதிக டேக் எடுத்தேன் அவர் டெடிகேட்டட் ஆக நடித்தார் என கூறியுள்ளார்.