
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜயகுமார். இவரின் மகன் அருண் விஜய் தற்போது பிரபல நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆன படம் மிஷன்.இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
இந்த படம் இதுவரை 17 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. இப்படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த போது காயம் ஏற்பட்டுள்ளது. படம் வெற்றியை பத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில் மிஷன் சேப்டர் 1 படம் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்தார் அருண் விஜய். இந்த வெற்றி நான் கடந்த 2 மாதங்களாக அனுபவித்த வலியை மறக்க செய்துவிட்டது. ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் போது பல இடங்களில் ligament tear மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உங்கள் அன்பால் மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். இவர் இரண்டு மாதகளாக படுத்த படுக்கையாக இருந்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். தற்போது இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.