
தமிழ் சினிமாவில் 80’s காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை உமாரியாஸ். இவர் 1983ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமானார்.
இவர் 1992ல் நடிகர் ரியாஸை திருமணம் செய்த இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதோடு இவரின் மூத்த மகன் ஷாரிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிரபலமாகி படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரியாஸ் தங்களது காதல் திருமணத்தை குறித்து அதில் பேசியுள்ளார். அதாவது இருவரும் காதலித்து மூன்று மாதத்தில் கல்யாணமும் செய்துள்ளதாக இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் எனக்கு 20 வயது, அவளுக்கு 19 வயது இருக்கும்போது வேலை கூட இல்லை, சூழ்நிலை காரணமாக இருவரும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டோம். இந்த தவறை வேறு யாரும் செய்யக்கூடாது. நீண்ட காலம் உறவில் இருக்க வேண்டும்.
அதன் பின்பு இருவர் குடும்பத்திலும் பேச்சு வார்த்தை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு, அதன் பின்பு தான் முன்னேறி சினிமா துறையில் பல லட்சியங்களோடு நடித்து, வாழ்வில் முன்னேறி உள்ளோம் என அந்த பேட்டியில் பேசியுள்ளார்.