அப்படி போடு.. அரையிறுதியில் சரித்திர வெற்றி பெற்ற இந்தியா.. நாடு முழுவதும் எதிரொலிக்கும் அலப்பறைகள்… வைரல் வீடியோ உள்ளே…!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியானது, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு உலகக்கோப்பை தொடரில், இதுவரையிலும் பங்கேற்ற 9 லீக் போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற  அரை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

   

இந்நிலையில் நேற்று நியூசிலாந்து அணி உடன் மோதி கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில், நியூசிலாந்தை தோற்கடித்தது, இந்தியா. தற்போது உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவின் இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களில் மக்கள் வெடி முழக்கத்துடன், இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் அபார வெற்றியை பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர். இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ