
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் ரோபோ சங்கர். கிராமப்புறங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது பயணத்தை தொடங்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான,
‘மாரி 2’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.இதைத் தொடர்ந்து இவர் ஆற்றல் மாயா, சாகம், ஆறுவது சினம், ஜித்தன் 2, வேலைக்காரன், மேதை போன்ற பல படங்களில் நடித்து மாபெரும் ஹிட் அடித்தார்.
இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் வெளியான கோதை, தமிழரசன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகர் ரோபோ சங்கர் பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டர்.இவர்களுக்கு இந்திரஜா என்ற ஒரு மகளும் உள்ளார்.
அவரது மகளின் இந்திரஜா பிகில், விருமன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் இவரின் மகள் இந்திரஜாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
மாப்பிள்ளைக்கு நடிகர் ரோபோ சங்கர் 15 லட்சத்திற்கு கார் ஒன்று வாங்கி கொடுத்தது சமூக வலைதளகளில் வைரலானது.இந்நிலையில் இந்திரஜா ஹனிமூன் சென்றுள்ளார்.அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.