பொது இடத்தில் தன் கணவர் செய்த செய்யலால் கண்களங்கிய  சினேகா..ரெண்டு பேருக்கும் இப்படியா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை சினேகா. இவர் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து ,விரும்புகின்றேன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில்  நடித்துள்ளார்.நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

   

அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது சினேகா Greatest of All Time  என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என்ற நிகழ்ச்சி நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

சின்னத்திரையிலும் மற்றும்   வெள்ளித்திரையிலும் பிஸியாக இருந்து வருகிறார்   சினேகா .இந்த வாரம் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியில் தனது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடுவராக இருந்தார். அப்போது வயதான தோற்றத்துடன் நடனம்  ஆடிய ஜோடி டான்ஸ்  அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.இதை பார்த்து சினேகாவிடம் பிரசன்னா வயதான பிறகும் கூட இதே போல் நான் சினேகாவுடன் இருக்க வேண்டும் என  கூறினார். இதை கேட்டவுடன் சினேகாவை கண்கலங்கி அழுதார்.