பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் இவர்தானா?… இப்படி ஒரு போட்டியா?… வெளியான ப்ரோமோ இதோ….

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின்  இன்றைய நாளின் முதல் பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. 80 நாட்களைக் கடந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளர் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

   

21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர். இவர்களில் யார் டைட்டில் வெல்வார்கள் என ரசிகர்கள் தற்பொழுது கணித்து விட்டனர்.

இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் இந்த வார தலைவருக்கான டாஸ்க் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் அசிம் மற்றும் ADK இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார். இருவரில் யார் இந்த வார கேப்டனாக இருக்க தகுதி பெற்றவர் என்பது தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அசீம் மற்றும் ஏடிகே இருவரும் தனியாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். ஏடிகே அசீமைப் பார்த்து ‘உங்களை விட எனக்கு கோபம் குறைவு என்று நினைக்கிறேன்’ எனக் கூறுகின்றார். இதனைத் தொடர்ந்து அசீம் ‘நீங்க இவ்வாறு கூறுவது கோபத்தின் வடிவம் என முத்திரை குத்துவது போல் இருக்கிறது’ என்கின்றார்.  இவ்வாறு இன்றைய நாளின் முதல் பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….