63 குழந்தைகள் இறப்பு..!”உண்மை சம்பவத்தை படமாக்கிய ஜாவன்”..!டாக்டரின் டுவிட்டர் பதிவால் வெளிவந்த உண்மை??

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கான் நடிப்பில், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ள படம் ‘ஜவான்’. இதை அட்லீ இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 100 சதவிகித ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் 5 சர்வதேச சண்டை இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர். இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது.

Shah Rukh Khan confirms Nayanthara as his co-star in Jawan, says 'Atlee and I have good chemistry' – Report Wire

   

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் 2017 ஆம் ஆண்டு கோராக்பூரில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை எடுத்துக்காட்டி உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிப்படைந்த டாக்டர் கபில் கான் என்பவர் இயக்குனர் அட்லி மற்றும் ஷாருக்கானுக்கு தனது நன்றியை தெரிவித்து கடிதமாக எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது, “மதிப்பிற்குரிய நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷாருக்கானுக்கு சினிமாவை முக்கியமான சமூக-அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உங்கள் அசாதாரண அர்ப்பணிப்புக்கு எனது பாராட்டுகள். கோரக்பூர் மூளைக்காய்ச்சல் சம்பவத்தின் கொடூரமான சித்தரிப்பு என் இதயத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளது என்றும் ஜவான் ஒரு கற்பனைப் படைப்பு  தான் என்றும் தெரிகிறது. இருந்தாலும்  கோரக்பூர் சோகத்திற்கு காரணம், அக்கறையின்மை மற்றும் மிக முக்கியமாக இழந்த அப்பாவி உயிர்களின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக இந்த படம் இருக்கிறது என்று எழுதியுள்ளார்.

முதல் நாள் உலகளவில் ஜவான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

எங்கள் மருத்துவ வாழ்க்கையில் உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிகிறார்கள், எனது வேலையைத் திரும்பப் பெற நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன் மற்றும் குழந்தைகளை இழந்த அந்த 63 பெற்றோர்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கிறார்கள் என்று அதில் டாக்டர் கபில் கான் எழுதியுள்ளார். இதோ,