
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. விறுவிறுப்பிலும் பரபரப்பிலும் பஞ்சமே இருக்காது அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல் ‘. இந்த சீரியல் ஆனது சில மாதங்களுக்கு முன்பாக நம்பர் ஒன் சீரியலாக இருந்த நிலையில்.
இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மறைவிற்குப் பின். டாப் 5 வில் வந்துவிட்டது. தற்போது அந்த வீழ்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் தன் அண்ணன் சொல்லை வேத வாக்கு என்று நடந்து வந்த தம்பி கதிர் வாழ்ந்து அண்ணனை எதிராக பேசி வருகிறார். சென்ற வாரம் ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி கடத்தப்பட்டுள்ளார்.இந்நிலையில் இன்றைய நாளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஆதி குணசேகரன் இடம் ‘ஒன்னு நீ திருந்து இல்ல என்ன திருந்த விடு’ என கோபத்துடன் கூறுகிறார் கதிர்.
மருமகள்கள் ஜீவனந்தத்தை பார்க்க சென்றுள்ளனர். தன் வீட்டில் இருக்கும் மருமகள்கள் யாரும் தேவையில்லை என கூறிவிட்டு, கையில் அரிவாளுடன் வந்து நிற்கிறார் விசாலாட்சி இத்துடன் ப்ரோமோ முடிந்துள்ளது.தற்போது இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.