
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்பு பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘நான் மகான் அல்ல’ படம் மூலம் பிரபலமானார். மேலும், நடிகர் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா படத்திலும், விவேகம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார்.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் ஹே சினாமிகா, கோஸ்டி, கருங்காப்பியம் என தற்போது மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இவர் கெளதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். மேலும் காஜல் திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் இவர் பிலிம் ஃபேர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை காஜல் அகர்வால், வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் காட்டு பகுதியில் எடுத்த கவர்ச்சி போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.