திருமணம் முடிந்த கையோடு இன்னொரு குல சாமி கல்லறைக்கு வந்த புதுமண தம்பதியினர் கார்த்திக் -இந்திரஜா..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.சமீபத்தில் ரோபோ சங்கர் மகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் அவர்களைப் பற்றி ஒவ்வொரு  நாளைக்கு ஒவ்வொரு  புகைப்படங்களும்  இணையத்தில் மிகவும் வைரலாகியது.மதுரையில் தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பியதும் நேற்றைய தினம்  புது மண தம்பதி நேராக கேப்டன் சமாதிக்கு சென்றுள்ளனர்.

   

அங்கு பத்திரிகையாளரை சந்தித்த ரோபோ சங்கர்  பத்திரிக்கைகளை சந்தித்து இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் நம்மளுடைய அன்பு தம்பி சண்முக பாண்டியன் பிறந்தநாள் இன்று அவருக்கு மனமார்ந்த என்னுடைய வாழ்த்துக்கள்.அதேபோல் ஒரு ஹீரோவின் படம் 100 நாள் ஓடுனதா சரித்திரமே கிடையாது  ஒன் அன் ஒன்லி கேப்டன் படம் மட்டுமே அவ்வாறு திரையரங்குகளில் ஓடியது.இன்னைக்கும் அவரது நூறாவது நாள் அவரது சமாதிக்கு இன்னைக்கு வரைக்கும் அவரை பார்க்க கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கின்றது.

புதுமன தம்பதியினர் சென்னை வந்ததும்  குல சாமிக்கு அப்புறம் நாங்க வந்து பாக்குற முதல் சாமி கேப்டன் தான்  இந்த இடத்திற்கு நாங்கள் வருகிறோம் என்று  அன்னியாரிடம் கூறிய போது  இந்த தேதியில் வாருங்கள்  சரியாக இருக்கும் எங்களுக்கு அனுமதி கொடுத்தாங்க  ரொம்ப மகிழ்ச்சியாக  குடும்பத்தோடு வந்து எங்களுடைய குல சாமியை  போல் கேப்டனை தரிசித்தது மகிழ்வான தருணம்  என்று கூறியுள்ளார்.