பிளாங்க் செக்குடன் காவ்யா மாறன் – ஹைதராபாத் அணி கேப்டனாகும் ரோஹித் ஷர்மா?

கிரிக்கெட் விளையாட்டு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண், பெண் என்று பேதம் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த  ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டு வந்தார். இந்த வருடம் சாதாரண விளையாட்டு வீரராக அந்த டீமில் விளையாடி வருகிறார்.

   

தற்போது மும்பை அணியின் கேப்டனாக  குஜராத் அணியிலிருந்து எடுத்த  ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை அணி இதுவரை விளையாடிய  போட்டிகளில் அனைத்திலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. ரோஹித் மற்றும் பாண்டியா இடையில் ஒவ்வொரு போட்டியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் ரசிகர்களும் இடையிலும் சண்டையிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ரோஹித் சர்மா மும்பையில இருந்து  விலக இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி  வைரலானது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்ற  தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத் அணியில்  இணைவதற்காக அணியின் உரிமையாளர் காவியா மாறன் ரோகித் சர்மாவுடன் ஒப்பதம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் படி  ஐந்து ஆண்டுகளுக்கு ஹைதராபாத் அணியின் கேப்டனாக  செயல்படுவார். அதற்கு ஒப்பந்த தொகை அவரை தெரிவிக்க ஏதுவாக ரோகித் சர்மாவுக்கு உள்ள பிளாக் கிங் பிளாங்க் செக் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.