
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நீளம் ப்ரொடக்சன் தயாரிப்பில் இயக்குனர் ஜெய் இயக்கி உள்ளார்.இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன்,திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சில் பயகரமாக பேசி அனைவரையும் ஆச்சரிய படுத்தி உள்ளார் கீர்த்தி பாண்டியன்.அதில் அவர் பா.இரஞ்சித் பெயர் வந்தாலே அரசியல் பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்களானு கேக்குறாங்க. பேசுனா என்ன தப்பு?. நம்ம போடுற துணியிலிருந்து ,குடிக்கிற தண்ணி, சாப்பாடு அனைத்திலும் அரசியலில் இருக்கிறது. அத பத்தி பேசவில்லை என்றால் அதுல அரசியல் இல்லைனு அர்த்தமில்ல.
‘ப்ளூ ஸ்டார்’ படத்துலையு ம் அரசியல் இருக்கு ஏன் நாம எடுக்குற எல்லா படத்துலையும் அரசியல் இருக்கு.பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்துலையும், இயக்கும் படத்திலையும் அவர் சொல்லும் விஷயம் ரொம்ப முக்கியமான ஒன்று அந்த விதத்தில் இந்த படத்தில் என்னோட பங்களிப்பு இருப்பதை ரொம்ப பெருமையாக இருக்கிறது. இன்று இந்த இசை வெளியீட்டு விழா நடப்பதை நான் முக்கியமான நாளாக கருதுகிறேன்.
இந்த சூழலில் ப்ளூ ஸ்டார் படத்தில் வரும் அரக்கோணம் ஸ்டைல் பாடலில் இடம்பெறும் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது எனக்கூறி, ‘காலு மேல கால போடு இராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே” என கூறி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சூசக பதிலடியும் கொடுத்துள்ளார். கீர்த்தியின் இந்த அரசியல் பேச்சைக்கேட்டு பா.இரஞ்சித் கைதட்டி பாராட்டினார்.